முகாமைத்துவ உதவியாளர் சேவையானது தற்பொழுது இணைந்த சேவைச் சுற்றறிக்கை 05/2019 இற்கமைவாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவையானது பின்வரும் சேவைகளை ஒன்றிணைத்து 2004.01.01 ஆம் திகதி முதல் உருவாக்கப்பட்டது.( அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 10/2004)
1.பொது எழுதுநர் சேவை
2.சுருக்கெழுத்தாளர் சேவை
3.தட்டெழுத்தாளர் சேவை
4.சிறாப்பர் சேவை
5.கணக்குப் பதியுநர் சேவை
6.களஞ்சியக் காப்பாளர் சேவை
சம்பள மாற்றியமைப்பு தொடர்பான சில விசேட சுற்றறிக்கைகள்
1.அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 15/99
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 37/92 இன் கீழ் சம்பளத்தொகுதி S-2-1 இல் இருந்து சம்பளத் தொகுதி S-2-2 இற்கு பதவியுயர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களின் சம்பளங்களை அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 2/97(III) இன் படி மாற்றியமைக்கும் போது சம்பளத்தில் முரண்பாடொன்று ஏற்படுகின்றது.
இம்முரண்பாட்டை நீக்குவதற்காக சம்பந்தப்பட்ட 1994.08.01 ஆம் திகதி தொடக்கம் 1996.12.31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் வகுப்பு - II”ஆ” இலிருந்து வகுப்பு - II”அ” விற்கு பதவியுயர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 37/92 இல் குறிப்பிட்டுள்ள சம்பள அளவுத்திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டதாக உத்தேசமாகக் கொண்டு உயர்த்தப்பட்ட பதவிக்குரிய சம்பள அளவுத்திட்டத்திற்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் அதன் பின் 1996.12.31 ஆம் திகதி வரை சம்பள ஏற்றங்களை உழைத்துப் பெற்றிருந்தால் அச்சம்பள ஏற்றங்களின் பெறுமதிகளையும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 37/92 இன் கீழ் உத்தேச அடிப்படையின் கீழ் சேர்த்து 1997.01.01 ஆம் திகதி தொடக்கம் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 2/97(III) இன் நேரொத்த படிநிலையின் 40% அதிகரிப்பின் கீழ் வைத்தல் வேண்டும்.
2.அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 17/2008
2004.01.01 ஆம் திகதி முதல் அரச முகாமை சேவை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதில் வகுப்பு I இற்கும், அதியுயர் வகுப்பிற்கும் பதவியுயர்வு பெறுகின்ற அலுவலர்கள் பெறுகின்ற சம்பளத்தை விட ஏற்கனவே அச்சேவையில் கடமையாற்றுகின்றவர்கள் பெறும் சம்பளமானது குறைவாகக் காணப்படுகின்றமையைக் கருத்திற் கொண்டு மேற்படி சுற்றறிக்கைக்கு அமைவாக 2003.12.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வகுப்பு - II”அ” இலிருந்து வகுப்பு - I விற்கு பதவியுயர்வு பெற்றவர்களும் வகுப்பு - I இலிருந்து அதியுயர் தரத்திற்கு பதவியுயர்வு பெற்று அதன் காரணமாக சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள அலுவலர்கள்களும் முறையே வகுப்பு - II”அ” மற்றும் வகுப்பு - I இல் இருந்ததாகக் உத்தேசித்து 2004.01.01 ஆம் திகதிக்கு பின்னராக அமைகின்ற தற்போதைக்கு பெற்றுள்ள பதவி உயர்வுக்கு கிட்டிய சம்பள ஏற்றத் திகதியில் பதவி உயர்வு பெறப்பட்டதாக உத்தேச முறையில் கருதி சம்பளத்தை மாற்றியமைத்தல் வேண்டும்.
3.இணைந்த சேவைகள் சுற்றறிக்கைக் கடிதம் 04/2019
2013.12.11 ஆம் திகதிய 1840/34 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை பிரமாணக் குறிப்பு நடைமுறைப்படுத்தப்படும் 2013.04.02 ஆம் திகதியில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் I மற்றும் தரம் II இற்கு பதவியுயர்வு பெற்ற உத்தியோகத்தர்களின் அந்தப் பதவியுயர்வு மற்றும் சம்பளம் தயாரித்தல் பணிக்காக மட்டும் 2013.04.02 ஆம் திகதியின் பின்னர் எழுந்த முன்னைய தரத்தின்/ முன்னர் கிடைத்த உரிய சம்பள ஏற்றத் திகதியில் நிகழ்ந்தது எனக்கருதி சம்பளமாற்றங்களைச் செய்வது அவசியமாகும்.
பின்னர் எதிர்கால சம்பள ஏற்றத் திகதியாக உத்தியோகத்தரின் உண்மையான பதவியுயர்வுத் திகதியைக் கருதுதல் வேண்டும்.
மேற்படி சேவையில் 1975.04.01 ஆம் திகதி முதல் தற்போது வரையுள்ள சம்பளமாற்றங்களை இவ்விணைப்பில் தரப்பட்டுள்ள அட்டவணையினைப் பயன்படுத்தி இலகுவாக மேற்கொள்ள முடியும்.
No | Post | Segment/Grade | |
01. | General Clerk / Management Assistant | II’B’/III | |
02. | General Clerk / Management Assistant | II’A’/II | |
03. | General Clerk / Management Assistant | I | |
04. | General Clerk / Management Assistant | Supra |