அரச அலுவலர் ஓருவர் ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் நடப்பாண்டில் அவருக்கு உரித்துடைய ஓய்வு விடுமுறையுடன் முன்னைய ஏதேனும் ஈராண்டுகள் சேமித்து வைத்துள்ள ஓய்வு விடுமுறைகளையும் ஓய்வுக்கு முற்பட்ட விடுமுறையாக பெற்றுக்கொள்ளலாம். (பொ.நி.சு - 03/97)
எனினும் அலுவலர் ஒருவர் தனது சேவைக் காலத்தினுள் சேமித்து வைத்துள்ள அமைய விடுமுறை மற்றும் சுகவீன/ ஓய்வு விடுமுறைகளைப் பயன்படுத்தி 12 மாதங்கள் எனும் வரையறைக்குள் ஓய்வின் முன்னரான விடுமுறைகளைப் பெற முடியும். (01.01.2006 ஆம் திகதி முதல் சேமித்துள்ள விடுமுறைகளையே இதற்குப் பயன்படுத்தலாம்.) (பொ.நி.சு - 24/2007)
ஆனால் பொ.நி.சு - 24/2007 திருத்தியமைக்கப்பட்டு 2011.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வு பெறும் பயன்படுத்தப்பாடாத விடுமுறையின் உச்ச அளவாக மூன்று மாத காலப்பகுதியை ஓய்வுக்கு முந்திய விடுமுறையாக பெற்றுக்கொள்வதற்கு குறித்த உத்தியோகத்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுதல் வேண்டும்.(பொ.நி.சு - 19/2010)