1335/15 ஆம் இலக்க 2004.08.25 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2003.05.01 ஆம் திகதியிலிருந்து சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் மேற்படி சேவை பிரமாணக்குறிப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்ட சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் 2009.10.15 ஆம் திகதியிலிருந்து 1372/23 ஆம் இலக்க 2004.12.24 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க முகாமை உதவியாளர் சேவை பிரமாணக் குறிப்பின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகின்றார்கள். ( அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 17/2009)
மேற்படி, சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் கடமையாற்றிய காலப்பகுதியில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட பின்வரும் பொது சுற்றறிக்கைகளுக்கு அமைவாக அவர்களது சம்பளங்கள் கணிக்கப்படுதல் வேண்டும்.
1.பொது சுற்றறிக்கை இல - 01- 06/2003
2.பொது சுற்றறிக்கை இல - 01- 02/2004
3.பொது சுற்றறிக்கை இல - 02- 130/2003
எனினும், கிழக்கு மாகாண சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவை கிழக்கு மாகாண பொது நிருவாக சுற்றறிக்கை இல 02/2011 இன் மூலம் 2011.08.01 ஆம் திகதி முதல் இல்லாதொழிக்கப்பட்டு அவ்வுத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையினுள் உள்ளீர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பள மாற்றியமைப்பு தொடர்பான சில விசேட சுற்றறிக்கைகள்
1.அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 30/2013
சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையிலிருந்து அரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்ட சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் வகுப்பு மற்றும் வகுப்பு I இல் கடமையாற்றிய அலுவலர்களுக்கு மாத்திரம் சம்பள முரண்பாடுகளை நீக்கும் நோக்கத்திற்காக மட்டும் 2003.05.01 ஆம் திகதி தொடக்கம் 2009.10.15 ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதியில் அவர்கள் சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு சொந்தமாக்கப்பட்ட அலுவலர்களாக கருதப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி சேவையில் 1975.04.01 ஆம் திகதி முதல் தற்போது வரையுள்ள சம்பளமாற்றங்களை இவ்விணைப்பில் தரப்பட்டுள்ள அட்டவணையினைப் பயன்படுத்தி இலகுவாக மேற்கொள்ள முடியும்.
General Clerical Service/Health Management Assistant Service
No | Service | Segment/Grade | |
01. | Health Management Assistant | III | |
02. | Health Management Assistant | II | |
03. | Health Management Assistant | I | |
04. | Health Management Assistant | Supra |