நிரந்தர அரசாங்க சேவையுடைய உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வுக்குச் செல்கையில் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்குரிய குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் 24 மடங்கினை ஒரு தடவை மட்டும் வழங்குதல் ஓய்வூதியப் பணிக்கொடையாகும்.
இதற்காக பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.
1.ஓய்வூதியரின் விருப்புக் கடிதம் பெறல் வேண்டும். புணிக்கொடையினை ஒருவர் பெறுவாராயின் 10 வருடத்திற்கு அல்லது ஓய்வூதியரின் இறப்பு ஆகிய இரண்டில் முந்திய காரணம் நிகழும் வரை குறைக்கப்பட்ட ஓய்வூதியமே வழங்கப்படும்.
2.20 வருட சேவை முடிவில் ஓய்வு பெறுபவர்கள் 50 வயதையும் நீதிபதிகள் தவிர்ந்த ஏனைய சிவில் ஓய்வூதியர்கள் 55 வயதையும் அடைந்திருத்தல் வேண்டும்.
3.தற்போது ஓய்வுதியம் மீளாய்வு செய்யப்படும் போது PD6 விண்ணப்பப் படிவத்தை இயங்கலையின் ஊடாக (PMS) அனுப்ப வேண்டும். இதனைப் பிரதேச செயலகத்திற்கு அனுப்பத் தேவையில்லை.
4.பிரதேச செயலகங்களுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மீளாய்வுக்கான அனுமதிக் கடிதத்தினை இயங்கலையில் பெற்று அதனை உறுதிப்படுத்தி அனுப்புதல் கட்டாயமாகும்.