அரசாங்க சேவையொன்றில் நிரந்தர ஓய்வூதியத்துடனான நியமன மொன்றைப் பெற்று அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டு நிரந்தர ஓய்வூதியத்துடனான 5 வருடங்கள் (60 மாதங்கள்) பூர்த்தி செய்து அரச சேவையில் இருக்கும் காலத்தில் மரணமடையும் அரச உத்தியோகத்தர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு ஒரு முறைக் கொடுப்பனவு மரணப் பணிக்கொடை எனப்படும்.
இது அவரது குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் 24 மாதக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
மரணப் பணிக்கொடையினைப் பெறவதற்கு உரித்துடையவர்கள்
1.திருமணமான உத்தியோகத்தர் உயிரிழக்கும் போது சட்டரீதியான மனைவி/தபுதாரர் மற்றும் தொழிலற்ற திருமணமாகாத பிள்ளைகள்.
2.திருமணமாகாத உத்தியோகத்தர்கள் உயிரிழக்கும் போது தாய் மற்றும் தந்தை பெற்றோர் இல்லையாயின் இறந்தவரின் பராமரிப்பிலிருந்த திருமணமாகாத சகோதர சகோதரிகள்.
3.உரித்துடைய பயனாளிகள் இல்லாத பட்சத்தில் மரணமடைந்த உத்தியோகத்தர் அரசுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் ஏதுமிருப்பின் அதனை ஈடுசெய்து கொள்வதற்காக மாத்திரம் மரணப் பணிக்கொடை வழங்கப்படும்.
அச்சுப் பிரதியுடன் பின்வரும் ஆவணங்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
1. அலுவலரின் மரணச் சான்றிதழின் மூலப்பிரதி.
2.துணைவரினதும் பிள்ளைகளினதும் அல்லது திருமணம் முடிக்காத அலுவலர் இறப்பின் பெற்றோர்களினதும் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
3.மரணப் பணிக்கொடையினைப் பெற்றுவதற்கு உரிமை
உள்ளவரின் உறுதிப்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி
4.எல்லா பிள்ளைகளினதும் உறுதிப்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி.
5.தேசிய அடையாள அட்டை, வரலாற்றுத் தாள், இறுதிச் சம்பள விபரம் என்பவற்றின் உறுதிப்படுத்திய் பிரதி.
6. பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இற்கு அமைய தயாரிக்கப்பட்ட சம்பள மற்றக் கடிதம்.
7. பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்திய தங்கி வாழ்வோர் அறிக்கை.
8. பூரணப்படுத்திய PD4 படிவம்.
Note:- 2018.06.01 ஆம் திகதியில் இருந்து இயங்கலையின் மூலம் மரணப் பணிக்கொடைக்கான புதிய விண்ணப்பமான PD5 இனைப் பூரணப்படுத்தல் வேண்டும்.
மரணப் பணிக்கொடை கணிப்பீடு செய்யும் முறை
1.ஓய்வூதிய உரித்துடைய மொத்த சேவைக்காலத்தைக் கணிப்பீடு செய்தல்.
2.இச் சேவைக்காலமானது 25 வருடங்களுக்கு மேலானதாகக் காணப்படின் அதற்குரியது போன்று அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள சதவீதங்களை கணிப்பீட்டின் பொருட்டு பயன்படுத்த முடியும்.
3.இச்சேவைக்காலமானது 25 வருடங்களிலும் பார்க்க குறைவாகக் காணப்படுமாயின் அக்குறைவான காலப்பகுதிக்கு வருடமொன்றுக்கு 2% வீதமும் ஒவ்வொரு ஆறு மாதம் அல்லது அதிலும் குறைவான காலப்பகுதிக்கு 1% வீதமும் கணக்கிட்டு 25 வருட சேவைக்கால சதவீதத்திலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.
4.சம்பளமற்ற விடுமுறைகள் ஏதும் காணப்படுமாயின் அதில் ஒரு வருடத்தை விலக்களிக்க முடிவதுடன் ஏனைய ஒவ்வொரு மாதங்களுக்கும் 0.2% வீதப்படி கணிப்பீடு செய்து அதனை மொத்தசதவீதத்திலிருந்து கழிப்பனவு செய்தல் வேண்டும்.
5.மேற்படி தேறிய சதவீதத்தினை இறுதியாகப் பெற்ற ஆண்டுச் சம்பளத்தினால் பெருக்கி அதனை இரண்டினால் பெருக்கக் கிடைப்பதே மரணப் பணிக்கொடை தொகையாகும்.
6.மேற்படி மரணப் பணிக்கொடையில் அரைவாசித் தொகை சட்டபூர்வமான மனைவிக்கும் மற்றைய அரைவாசித் தொகை சட்டபூர்வமான பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமமாகப் பங்கிடப்படுதல் வேண்டும்.