ஓய்வூதியம் பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள்

ஓய்வு பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில்  குறிப்பிடப்பட்டுள்ளதுடன் காலத்துக்கு  காலம்  பொது  நிருவாக  அமைச்சினாலும்  ஓய்தியத்  திணைக்களத்தினாலும்  வெளியிடப்படுகின்ற  சுற்றறிக்கைகளினாலும்  இந்தச்  சட்ட  ஏற்பாடுகள்  மீளமைக்கப்படலாம்.

1.விருப்பத்துக்கிணங்க  ஓய்வுபெறல்.
ஓ.பி 2: 17  மற்றும்  26 (ix)  என்பவற்றின் படி  55-60  வயதுக்கிடைப் பட்டவர்கள்  ஒய்வுபெறுவதைக்  குறிக்கும்.

2.கட்டாய ஓய்வு பெறுதல்.
ஓ.பி 2:17  இன் படி  60  வயதையடைந்தவர்கள்  ஓய்வு பெறுவதைக்  குறிக்கும்.  ஆனால்  சில திணைக்கள அதிகாரிகளுக்கு இது பொருந்தாது.

Eg:- பொறியியலாளர்கள் பொ.நி.சு  06/2017 இன் படி 61 வயது வரைக்குப் பின்னர்  ஓய்வுபெறல்.

3.மருத்துவக் காரணங்கள்
ஓ.பி 2:14 இன் படி அரச ஊழியருக்கு கடமையாற்றுவதற்கு முடியாதென வைத்திய சபையொன்றின் விதந்துரைப்பின் படி வழங்கப்படுவதாகும். இதற்கு குறைந்தது 120 மாதங்கள் குறித்த அலுவலர் தொடர்ச்சியாகக் கடமை புரிந்திருத்தல் அவசியமாகும்.

4.பதவி வழக்கொழிதலின் (பதவி காலவதியாதலின்) மூலம் ஓய்வு பெறச்செய்தல்.
ஓ.பி 2:7 இன் படி பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குதல். 

1. 120 மாத சேவைக் காலத்தைக் கொண்டிருத்தல்
2.ஓய்வூதிய பணிக்கொடையும், மாதாந்த ஓய்வூதியமும் ஓய்வு  
   பெறும் தினத்திலிருந்து கிடைக்கும்.
3. 60 மாத சேவைக்காலம் கூட்டுச் சேர்க்கப்படும்.
4.120 மாத சேவைக்காலம் இல்லாத போது 50% சேவைக் காலத்தினைக் கூட்டி மாதாந்த வேதனத்தின் 1/12% கணக்கிடப்பட்ட    பணிக்கொடை ஒன்று கிடைக்கும்.

5. அரச மொழிகள் குறிக்கோளின் கீழ் ஓய்வு பெறல்
ஓ.பி 2:48 இன் படி பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குதல். 

620 வருட சேவைக் காலம் அல்லது வயது 50 வருடங்களாகும் திகதி ஆகிய இரண்டில் முந்திய திகதியில் ஓய்வு பெறல்.

ஓ.பி 2:14 இன் படி ஓய்வு பெறுவதாகும்.

பெண் ஆசிரியைகள், பெண் தாதியர்கள், பெண் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு மாத்திரம் உரித்தாகும். 

7.ஒழுக்காற்றுக் காரணங்களின் மூலம் ஓய்வு பெறச்செய்தல்.

ஓ.பி 2:12 இன் படி ஓய்வு பெறுவதாகும்.

ஒழுக்காற்று விசாரணை முடிவடையாமல் மாதாந்த ஓய்வூதியமோ பணிக்கொடையோ வழங்கப்பட மாட்டாது.

8.வினைத்திறமையின்மை காரணமாக ஓய்வு பெறச்செய்தல்.

ஓ.பி 2:15 இன் படி ஓய்வு பெறுவதாகும். ஓ.சு. 30/88 இன் படி 20 வருட சேவையைப் பூர்த்தி செய்த எந்த அரச உத்தியோகத்தர்களும் ஓய்வு பெறல்.

ஆனால்,  55 வயதில் இருந்துதான் அவருக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை என்பன வழங்கப்படும்.

 9.  நீதித்துறை அதிகாரிகளை ஓய்வு பெறச்செய்தல்.

ஓ.பி 2:25 இன் படி மேல் நீதிமன்ற நீதிபதி 65 வயதிலும் மேன்முறையீட்டு நீதிபதி 63 வயதிலும் உயர் நீதிமன்ற நீதிபதி 61 வயதிலும் ஏனைய நீதிபதிகள் 60 வயதிலும் ஓய்வு   பெறலாம்.

10. ஓய்வூதியத்தை இடைநிறுத்தி அரச கூட்டுத்தாபன அல்லது அதிகார சபையில் சேவையாற்றுவதற்கு ஓய்வு பெறல்

ஓ.பி 2:48(அ) இன் படி ஓய்வூதியம் வழங்கப்படுவது அரச கூட்டுத்தாபனத்தில் இருந்து முறையாக ஓய்வு பெறும் தினத்தில் இருந்தாகும்.