இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 1975.07.09 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1975.04.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் E code VII 4 படி சம்பள மாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Salaryconversion
பொ.நி.சு 197
இச்சுற்றறிக்கைவெளிவந்ததிகதி 1981.12.29 ஆகும்.
இச்சுற்றறிக்கைவலுப்பெறும் திகதி 1982.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப்படிநிலைஎனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொ.நி.சு 327
இச்சுற்றறிக்கைவெளிவந்ததிகதி 1986.05.02 ஆகும்.
இச்சுற்றறிக்கைவலுப்பெறும் திகதி 1986.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் E code VII(4) படி சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின்படிஅரசஉத்தியோகத்தர்கள் அனைவரினதும் வேதனஏற்றதிகதி ஜனவரி 01 ஆக கொள்ளப்படுகின்றது.
இவ்வாண்டில் மாத்திரம் வேதனஏற்றதிகதி ஜனவரி 01 ஆக உள்ளவர்களுக்குபழையசம்பளஅளவுத்திட்டத்தின் பிரகாரம் வேதனஏற்றம் வழங்கிய பின்னரே சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பொ.நி.சு 387
இச்சுற்றறிக்கை வெளிவந்ததிகதி 1987.10.11 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1988.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
1987.12.31 இல் பெற்றசம்பளத்துடன் 6048 ரூபா வாழ்க்கைப்படிச் செலவினை சேர்த்துக் கணக்கிடுதல் வேண்டும்.
இதன் போது பெறப்படும் மொத்தஅதிகரிப்பின் 50% ஜ 1988.01.01 இலும் மிகுதி 50% ஜ 1988.11.01 இலும் வழங்குதல் வேண்டும்.

பொ.நி.சு 37/92
இச்சுற்றறிக்கை வெளிவந்ததிகதி 1992.12.24 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1993.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கையின் படி பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பின் 50% இனை 1993.01.01 இலும் மிகுதி 50% இனை 1994.01.01 இலும் வழங்குதல் வேண்டும்.
பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பின் 60% இனை 1993.01.01 இலும் மிகுதி 40% இனை 1993.07.01 இலும் வழங்குதல் வேண்டும்.

பொ.நி.சு 29/94
இச்சுற்றறிக்கை வெளிவந்ததிகதி 1994.07.08 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1994.08.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சுற்றறிக்கை எழுதுநர் மற்றும் அதனோடு இணைந்தசேவைகளுக்காக வெளியிடப்பட்டது.
பொ.நி.சு 34/95
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 1995.11.14 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1995.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொ.நி.சு 2/97(III)
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 1997.11.12 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 1997.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியாகப் பெற்ற சம்பளத்துடன் வாழ்க்கைப்படிச் செலவாக பதவிநிலைஉத்தியோகத்தர்களுக்கு 7200.00 ரூபாவும், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 10320.00 ரூபாவும் சேர்க்கப்பட்டு பெறப்படும் அதிகரிப்பின் 40% இனை 1997.01.01 இலும் மிகுதி 60% இனை 1998.01.01 இலும் வழங்குதல் வேண்டும்.
பொ.நி.சு 15/2003
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2003.12.30 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2004.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொ.நி.சு 09/2004
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2004.12.27 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2004.12.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரிப்பின் 50% ஆனது 30000.00 ரூபாவுக்கு அதிமானால் அத்தொகையையும் அல்லது 30000.00 ரூபாவுக்கு குறைவானால் 30000.00 ரூபாவும் 2004.12.01 இலும் மிகுதி 2006.01.01 இலும் வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இம்மிகுதியானது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொ.நி.சு 06/2006
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2006.04.25 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2006.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப்படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக சம்பளஅளவுத்திட்டமானது மாதாந்தத்திற்கென மாற்றப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொ.நி.சு-15/2000, பொ.நி.சு-24/2001 இற்கிணங்க 1200.00 ரூபா + 1000.00 அல்லது அடிப்படைச் சம்பளத்தின் 10% இதில் எது கூடவோ அதுவும் சம்பளத்துடன் கூட்டப்பட்டது.
அதிகரிப்பின் 50% 2006.01.01 இலும் மிகுதி 50% 2007.01.01 இலும் வழங்கப்பட்டது.
பொ.நி.சு 06/2006(IV)
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2007.08.24 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2007.06.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் E code VII 4 படி சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொ.நி.சு 28/2010
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2010.12.31 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2007.06.01 ஆகும்.
எனினும் சம்பள நிலுவையானது 2011.07.01 ஆம் திகதியிலிருந்து வழங்கப்படுதல் வேண்டும். மேலும் பொ.நி.சு-06/2006(IV) இல் ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்வதற்காகவே இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொ.நி.சு 03/2016
இச்சுற்றறிக்கை வெளிவந்த திகதி 2016.02.25 ஆகும்.
இச்சுற்றறிக்கை வலுப்பெறும் திகதி 2016.01.01 ஆகும்.
இச்சுற்றறிக்கையில் படிநிலைக்குப் படிநிலை எனும் ஒழுங்கில் சம்பளமாற்றியமைப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பளமாற்றியமைப்பின் பகுதியளவான அதிகரிப்புக்கள் 2016, 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டு முழுமையான வேதனஅளவுத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மரணப் பணிக்கொடை(Death Gratuity)
அரசாங்க சேவையொன்றில் நிரந்தர ஓய்வூதியத்துடனான நியமன மொன்றைப் பெற்று அப்பதவியில் நிரந்தரமாக்கப்பட்டு நிரந்தர ஓய்வூதியத்துடனான 5 வருடங்கள் (60 மாதங்கள்) பூர்த்தி செய்து அரச சேவையில் இருக்கும் காலத்தில் மரணமடையும் அரச உத்தியோகத்தர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு ஒரு முறைக் கொடுப்பனவு மரணப் பணிக்கொடை எனப்படும்.
இது அவரது குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் 24 மாதக் கொடுப்பனவாக வழங்கப்படும்.
மரணப் பணிக்கொடையினைப் பெறவதற்கு உரித்துடையவர்கள்
1.திருமணமான உத்தியோகத்தர் உயிரிழக்கும் போது சட்டரீதியான மனைவி/தபுதாரர் மற்றும் தொழிலற்ற திருமணமாகாத பிள்ளைகள்.
2.திருமணமாகாத உத்தியோகத்தர்கள் உயிரிழக்கும் போது தாய் மற்றும் தந்தை பெற்றோர் இல்லையாயின் இறந்தவரின் பராமரிப்பிலிருந்த திருமணமாகாத சகோதர சகோதரிகள்.
3.உரித்துடைய பயனாளிகள் இல்லாத பட்சத்தில் மரணமடைந்த உத்தியோகத்தர் அரசுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் ஏதுமிருப்பின் அதனை ஈடுசெய்து கொள்வதற்காக மாத்திரம் மரணப் பணிக்கொடை வழங்கப்படும்.
அச்சுப் பிரதியுடன் பின்வரும் ஆவணங்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
1. அலுவலரின் மரணச் சான்றிதழின் மூலப்பிரதி.
2.துணைவரினதும் பிள்ளைகளினதும் அல்லது திருமணம் முடிக்காத அலுவலர் இறப்பின் பெற்றோர்களினதும் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
3.மரணப் பணிக்கொடையினைப் பெற்றுவதற்கு உரிமை
உள்ளவரின் உறுதிப்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி
4.எல்லா பிள்ளைகளினதும் உறுதிப்படுத்திய வங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி.
5.தேசிய அடையாள அட்டை, வரலாற்றுத் தாள், இறுதிச் சம்பள விபரம் என்பவற்றின் உறுதிப்படுத்திய் பிரதி.
6. பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இற்கு அமைய தயாரிக்கப்பட்ட சம்பள மற்றக் கடிதம்.
7. பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்திய தங்கி வாழ்வோர் அறிக்கை.
8. பூரணப்படுத்திய PD4 படிவம்.
Note:- 2018.06.01 ஆம் திகதியில் இருந்து இயங்கலையின் மூலம் மரணப் பணிக்கொடைக்கான புதிய விண்ணப்பமான PD5 இனைப் பூரணப்படுத்தல் வேண்டும்.
மரணப் பணிக்கொடை கணிப்பீடு செய்யும் முறை
1.ஓய்வூதிய உரித்துடைய மொத்த சேவைக்காலத்தைக் கணிப்பீடு செய்தல்.
2.இச் சேவைக்காலமானது 25 வருடங்களுக்கு மேலானதாகக் காணப்படின் அதற்குரியது போன்று அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள சதவீதங்களை கணிப்பீட்டின் பொருட்டு பயன்படுத்த முடியும்.
3.இச்சேவைக்காலமானது 25 வருடங்களிலும் பார்க்க குறைவாகக் காணப்படுமாயின் அக்குறைவான காலப்பகுதிக்கு வருடமொன்றுக்கு 2% வீதமும் ஒவ்வொரு ஆறு மாதம் அல்லது அதிலும் குறைவான காலப்பகுதிக்கு 1% வீதமும் கணக்கிட்டு 25 வருட சேவைக்கால சதவீதத்திலிருந்து கழிக்கப்படுதல் வேண்டும்.
4.சம்பளமற்ற விடுமுறைகள் ஏதும் காணப்படுமாயின் அதில் ஒரு வருடத்தை விலக்களிக்க முடிவதுடன் ஏனைய ஒவ்வொரு மாதங்களுக்கும் 0.2% வீதப்படி கணிப்பீடு செய்து அதனை மொத்தசதவீதத்திலிருந்து கழிப்பனவு செய்தல் வேண்டும்.
5.மேற்படி தேறிய சதவீதத்தினை இறுதியாகப் பெற்ற ஆண்டுச் சம்பளத்தினால் பெருக்கி அதனை இரண்டினால் பெருக்கக் கிடைப்பதே மரணப் பணிக்கொடை தொகையாகும்.
6.மேற்படி மரணப் பணிக்கொடையில் அரைவாசித் தொகை சட்டபூர்வமான மனைவிக்கும் மற்றைய அரைவாசித் தொகை சட்டபூர்வமான பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமமாகப் பங்கிடப்படுதல் வேண்டும்.

ஓய்வூதியத்தின் வகைகள்
குறித்த உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற பதவியைப் பொறுத்து பெற்றுக்கொள்ளும் நன்மைகளும் வேறுபடும்.
1. சிவில் ஓய்வூதியம்
2. ஓய்வூதியப் பணிக்கொடை
3. மரணப் பணிக்கொடை
4. விதவைகள்/ தபுதாரர் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம்
5. ஆயுதப்படைச் சேவை ஓய்வூதியம்
6. அரசசேவை சேமலாப நிதியம் (PSPE)
7. விசேட நட்ட ஈடு
8. நட்ட ஈடு
ஓய்வூதியப் பணிக்கொடை(Pension Gratuity)
நிரந்தர அரசாங்க சேவையுடைய உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வுக்குச் செல்கையில் அவரது விருப்பத்தின் அடிப்படையில் அவருக்குரிய குறைக்கப்படாத ஓய்வூதியத்தின் 24 மடங்கினை ஒரு தடவை மட்டும் வழங்குதல் ஓய்வூதியப் பணிக்கொடையாகும்.
இதற்காக பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.
1.ஓய்வூதியரின் விருப்புக் கடிதம் பெறல் வேண்டும். புணிக்கொடையினை ஒருவர் பெறுவாராயின் 10 வருடத்திற்கு அல்லது ஓய்வூதியரின் இறப்பு ஆகிய இரண்டில் முந்திய காரணம் நிகழும் வரை குறைக்கப்பட்ட ஓய்வூதியமே வழங்கப்படும்.
2.20 வருட சேவை முடிவில் ஓய்வு பெறுபவர்கள் 50 வயதையும் நீதிபதிகள் தவிர்ந்த ஏனைய சிவில் ஓய்வூதியர்கள் 55 வயதையும் அடைந்திருத்தல் வேண்டும்.
3.தற்போது ஓய்வுதியம் மீளாய்வு செய்யப்படும் போது PD6 விண்ணப்பப் படிவத்தை இயங்கலையின் ஊடாக (PMS) அனுப்ப வேண்டும். இதனைப் பிரதேச செயலகத்திற்கு அனுப்பத் தேவையில்லை.
4.பிரதேச செயலகங்களுக்கு ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மீளாய்வுக்கான அனுமதிக் கடிதத்தினை இயங்கலையில் பெற்று அதனை உறுதிப்படுத்தி அனுப்புதல் கட்டாயமாகும்.
ஓய்வூதியம் பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள்
ஓய்வு பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் காலத்துக்கு காலம் பொது நிருவாக அமைச்சினாலும் ஓய்தியத் திணைக்களத்தினாலும் வெளியிடப்படுகின்ற சுற்றறிக்கைகளினாலும் இந்தச் சட்ட ஏற்பாடுகள் மீளமைக்கப்படலாம்.
1.விருப்பத்துக்கிணங்க ஓய்வுபெறல்.
ஓ.பி 2: 17 மற்றும் 26 (ix) என்பவற்றின் படி 55-60 வயதுக்கிடைப் பட்டவர்கள் ஒய்வுபெறுவதைக் குறிக்கும்.
2.கட்டாய ஓய்வு பெறுதல்.
ஓ.பி 2:17 இன் படி 60 வயதையடைந்தவர்கள் ஓய்வு பெறுவதைக் குறிக்கும். ஆனால் சில திணைக்கள அதிகாரிகளுக்கு இது பொருந்தாது.
Eg:- பொறியியலாளர்கள் பொ.நி.சு 06/2017 இன் படி 61 வயது வரைக்குப் பின்னர் ஓய்வுபெறல்.
3.மருத்துவக் காரணங்கள்
ஓ.பி 2:14 இன் படி அரச ஊழியருக்கு கடமையாற்றுவதற்கு முடியாதென வைத்திய சபையொன்றின் விதந்துரைப்பின் படி வழங்கப்படுவதாகும். இதற்கு குறைந்தது 120 மாதங்கள் குறித்த அலுவலர் தொடர்ச்சியாகக் கடமை புரிந்திருத்தல் அவசியமாகும்.
4.பதவி வழக்கொழிதலின் (பதவி காலவதியாதலின்) மூலம் ஓய்வு பெறச்செய்தல்.
ஓ.பி 2:7 இன் படி பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குதல்.
1. 120 மாத சேவைக் காலத்தைக் கொண்டிருத்தல்
2.ஓய்வூதிய பணிக்கொடையும், மாதாந்த ஓய்வூதியமும் ஓய்வு
பெறும் தினத்திலிருந்து கிடைக்கும்.
3. 60 மாத சேவைக்காலம் கூட்டுச் சேர்க்கப்படும்.
4.120 மாத சேவைக்காலம் இல்லாத போது 50% சேவைக் காலத்தினைக் கூட்டி மாதாந்த வேதனத்தின் 1/12% கணக்கிடப்பட்ட பணிக்கொடை ஒன்று கிடைக்கும்.
5. அரச மொழிகள் குறிக்கோளின் கீழ் ஓய்வு பெறல்
ஓ.பி 2:48 இன் படி பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்குதல்.
6. 20 வருட சேவைக் காலம் அல்லது வயது 50 வருடங்களாகும் திகதி ஆகிய இரண்டில் முந்திய திகதியில் ஓய்வு பெறல்.
ஓ.பி 2:14 இன் படி ஓய்வு பெறுவதாகும்.
பெண் ஆசிரியைகள், பெண் தாதியர்கள், பெண் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு மாத்திரம் உரித்தாகும்.
7.ஒழுக்காற்றுக் காரணங்களின் மூலம் ஓய்வு பெறச்செய்தல்.
ஓ.பி 2:12 இன் படி ஓய்வு பெறுவதாகும்.
ஒழுக்காற்று விசாரணை முடிவடையாமல் மாதாந்த ஓய்வூதியமோ பணிக்கொடையோ வழங்கப்பட மாட்டாது.
8.வினைத்திறமையின்மை காரணமாக ஓய்வு பெறச்செய்தல்.
ஓ.பி 2:15 இன் படி ஓய்வு பெறுவதாகும். ஓ.சு. 30/88 இன் படி 20 வருட சேவையைப் பூர்த்தி செய்த எந்த அரச உத்தியோகத்தர்களும் ஓய்வு பெறல்.
ஆனால், 55 வயதில் இருந்துதான் அவருக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை என்பன வழங்கப்படும்.
9. நீதித்துறை அதிகாரிகளை ஓய்வு பெறச்செய்தல்.
ஓ.பி 2:25 இன் படி மேல் நீதிமன்ற நீதிபதி 65 வயதிலும் மேன்முறையீட்டு நீதிபதி 63 வயதிலும் உயர் நீதிமன்ற நீதிபதி 61 வயதிலும் ஏனைய நீதிபதிகள் 60 வயதிலும் ஓய்வு பெறலாம்.
10. ஓய்வூதியத்தை இடைநிறுத்தி அரச கூட்டுத்தாபன அல்லது அதிகார சபையில் சேவையாற்றுவதற்கு ஓய்வு பெறல்
ஓ.பி 2:48(அ) இன் படி ஓய்வூதியம் வழங்கப்படுவது அரச கூட்டுத்தாபனத்தில் இருந்து முறையாக ஓய்வு பெறும் தினத்தில் இருந்தாகும்.
Subscribe to:
Posts (Atom)